திடீரென பள்ளிகளுக்கு வந்த அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களையும் இந்த மாத இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள மின் கட்டண விவரங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டு எஸ்ஐடிஎஸ் என்ற செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்பொழுது வரை அரசு மேல்நிலை பள்ளிகளின் விபரங்கள் இந்த செயலியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து நடுநிலைப் பள்ளிகளில் 50 சதவீத விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .இந்த நிலையில் மீதமுள்ள 50% விவரங்கள் அனைத்தையும் மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.





