--- --:--:-- --

மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவான தாய்..!

4

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பெண் குழந்தையை விட்டு சென்ற விவகாரத்தில் பெற்றோரை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

காட்பாடி ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனது ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டியிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தாய் வராததால் குழந்தையை ஒப்படைத்தார்.

 

கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்ததில் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளோடு வந்த பெண் ஒருவர் குழந்தையை ஊதாட்டியிடம் விட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையின் தாயை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Right Menu Icon