திடீரென வீசிய துர்நாற்றம்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த இண்டிகோ விமானம்..!
திடீரென துர்நாற்றம் வீசியதையடுத்து புறப்பட்ட இடத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இண்டிகா விமானம் புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லி திரும்பி வந்தது.
விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசியதால் பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு தெரிவித்தது.





