மனைவியின் அக்கா கணவனை அடித்தே கொன்ற கொடூர நபர்..!
குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேஸ்வர் என்பவருடன் திருமணம் ஆன நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக்கொண்டு ஈஸ்வர் அக்காவின் வீட்டிற்கு சென்ற ராஜேஸ்வரியை தன்னுடன் வருமாறு கூறி வெங்கடேசன் தகராறு செய்திருக்கிறார். இதில் வெங்கடேசன் மீது மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரை ராஜேஸ்வரியின் அக்கா கணவர் சரவணன் சமரசம் செய்ய சென்ற பொழுது இருவருக்கும் இடையே கைகலப்பாக்கியுள்ளது.
இதில் சரவணன் கட்டையால் அடித்து வெங்கடேசன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





