ரயிலில் கைத்துப்பாக்கியை தவறவிட்ட பொன் மாணிக்கவேல்..!
ரயில் பயணத்தின் பொழுது முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தவறவிட்ட கைத்துப்பாக்கி அவரிடம் படைக்கப்பட்டது. சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலமாக பொன் மாணிக்கவேல் ஈரோடு சென்று உள்ளார்.
அவர் பயணித்த ரயில் பெட்டியில் 8 தோட்டாக்கள் உடன் கைத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. ரயில் பணியாளர்கள் இதனை மீட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அது பொன்மாணிக்கவேலின் துப்பாக்கி என்பது தெரியவந்தது.





