--- --:--:-- --

12 கிலோமீட்டர் நடந்து சென்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய மா.சுப்பிரமணியன்..!

6

மிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 12 கிலோமீட்டர் மலைக் கிராமங்களில் நடந்து சென்று கிராம மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேன்கனிக்கோட்டை அருகே ஆலங்குளம் அருகே மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

 

பின்னர் அங்குள்ள அரசு துவக்கப்பள்ளியில் இரவு தங்கி அமைச்சர் இன்று காலை நடைபயணமாக 12 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியிலுள்ள சிறுசிறு மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே சென்று அவர்களின் வாழ்வாதாரம் தொழில் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

அப்போது மலைகிராம மக்கள் மருத்துவம் சாலை மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் போன்றவை பெறுவதில் சிரமம் இருப்பதாக அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon