--- --:--:-- --

ஸ்டைல் பாண்டியின் 300 வது திருட்டு..!

3

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் எதிரொலியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பைபர் கேபிள் திருடப்பட்டுள்ளன.

 

ஒரு கட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்திலேயே திருட்டு நடைபெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி இளைஞர்கள் 300-வது திருட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகிறோம் என காவல்துறையின் கவனத்தை ஏற்கும் வகையில் பேனர் வைத்திருந்தனர்.

 

இந்த சூழலில் தொடர் திருட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட ஆரோக்கிய ஜெயசீலனை கைது செய்தனர்.

 

Right Menu Icon