மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற விரும்பும் மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறும் எனவும் கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






