--- --:--:-- --

அரக்கோணத்தில் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத மாணவன் 674 மதிப்பெண் பெற்று சாதனை..!

1

ரக்கோணத்தில் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவன் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் நீட் தேர்வில் 674 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

 

குருவராஜப்பேட்டை பகுதியை சேர்ந்த நெசவு கூலித் தொழிலாளியின் மகன் சக்திவேல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து விட்டு பின்னர் தனியார் பள்ளியில் பயின்று உள்ளான்.

 

இந்நிலையில் எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 358 மதிப்பெண்கள் பெற்ற இவர் மீண்டும் இந்த ஆண்டும் நீட் தேர்வை எழுதினார்.

 

இதில் தேர்ச்சி அடைந்த அவர் 674 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.. வீட்டிலிருந்தே விடா முயற்சியுடன் படித்து வந்ததால் அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்ததாக சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon