--- --:--:-- --

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!

3

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என்ற மத்திய கல்வி அமைச்சர் பேச்சை கண்டிக்கும் வகையில் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு நிதியை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அரசு தரப்பிலும் அரசியல் கட்சிகள் தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

 

இந்த நிலையில் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனை அகில இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

 

தேசிய கல்விக் கொள்கையை மட்டும் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பேச்சை கண்டிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பியதோடு காலங்களில் தாளங்கள் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Right Menu Icon