காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சென்னை அயனாவரத்தில் தனியார் மருத்துவமனையில் 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்ததாகவும் அதற்கான சிகிச்சையை முறையாக வழங்காததை சிறுவன் இறக்க காரணம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். சிறுவனின் சடலத்துடன் சாலையின் அமர்ந்து சென்றவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





