17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்து போன அவரது பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் மறுநாள் காலை சிறுமி வீடு திரும்பி உள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமூக வலைதளம் மூலம் இளைஞர்களுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இளைஞர்கள் கோவையில் உள்ள தங்களது அறைக்கு வருமாறு சிறுமிக்கு சமூக வலைத்தள கணக்கின் மூலமாகவே அழைப்பு விடுத்துள்ளனர். அந்த 17 வயது சிறுமியும் அவர்களை நம்பி அங்கு சென்றுள்ளார். நண்பர்கள் தானே என்று நம்பி சென்ற பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
திரும்பி வீடு திரும்ப தாமதமானதால் பயந்து போன சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களும் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் காலையில் திரும்பி வீடு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் யார் யார் என சந்தித்து அவர்களது சமூக வலைதள கணக்குகள் மூலம் மூன்று தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.





