இறந்தே பிறந்த குழந்தை..! செவிலியர்களும், மருத்துவர்களும் தான் காரணம் என குற்றம் சாட்டும் உறவினர்கள்..!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தோளூர் தெற்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்று அந்த பெண் கடந்த 2ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட முதலே சோனியாவுக்கு வயிற்றுவலி இருந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவர்களும் செவிலியர்களும் கண்டுகொள்ளவில்லை என்றும் அதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்க முற்பட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.






