--- --:--:-- --

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

3

ளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலூர் கீழவளவு, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, சென்னகரம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

 

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான காளவாசல், தெப்பகுலம், கோரிப்பாளையம், சிந்தாமணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாத மழை பெய்தது.

 

செட்டிநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, ராஜக்காபட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்தது. கடந்த 2 தினங்களாக வெயில் உச்சம் தொட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது.

 

 

வன்னியம்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. தேனி மாவட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென பரவலாக மழை பெய்தது. தேனி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, அல்லிநகரம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon