--- --:--:-- --

மாநில அளவிலான 2 வது ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2020 போட்டி : ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ் இ) பள்ளி

1

ராஜா ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் மாநில அளவிலான 2 வது ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2020 போட்டி ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ) பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 30 பதக்கங்களை பெற்றதுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

போட்டியின் முடிவில் ஏ.கே.ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ) பள்ளி நான்காம் வகுப்பு மாணவி கமலிகா இரண்டு தங்கம், ஏழாம் வகுப்பு மாணவர் வசந்த் இரண்டு தங்கம், ஆறாம் வகுப்பு மாணவி நாகவர்ஷினி இரண்டு தங்கம், ஐந்தாம் வகுப்பு மாணவர் சாய் வைபவ் இரண்டு தங்கம், ஐந்தாம் வகுப்பு மாணவர் தனிஷ் இரண்டு தங்கம், நான்காம் வகுப்பு மாணவர் ஹரி பிரனேஷ் 1 தங்கம், 1 வெள்ளி, இரண்டாம் வகுப்பு மாணவி அக்ஷரா 1 தங்கம்,1 வெள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவர் சக்திவேல் 1 தங்கம், 1 வெள்ளி, மூன்றாம் வகுப்பு மாணவர் விரிஷ் 1 தங்கம் பெற்றனர்.

 

இரண்டாம் வகுப்பு மாணவி சம்பிரீதா இரண்டு வெள்ளி, மூன்றாம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா இரண்டு வெள்ளி, இரண்டாம் வகுப்பு மாணவர் வெற்றிவேல் இரண்டு வெள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவர் ரோஹித் இரண்டு வெண்கலம், இரண்டாம் வகுப்பு மாணவர் அகிலன் 1 வெண்கலம், இரண்டாம் வகுப்பு மாணவி முத்துஹர்ஷா 1 வெண்கலம், இரண்டாம் வகுப்பு மாணவி ஓவியக்கரசி 1 வெண்கலம் பெற்றனர்.

 

அதேபோல் இரண்டாம் வகுப்பு மாணவி தர்ஷனா 1 வெண்கலம், இரண்டாம் வகுப்பு மாணவர் அபிநிவேஷ் 1 வெண்கலம் என 14 தங்கம், 09 வெள்ளி, 07 வெண்கலம் என 30 பதக்கங்கள் பெற்றதோடு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் குப்புசாமி, தாளாளர் லட்சுமி நாராயணன், முதல்வர் மணிமலர், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பயிற்சியாளர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon