--- --:--:-- --

பெங்களூரு குடிநீர் தேவைக்கான 5 டி.எம்.சி தவிர மற்ற நீர் தமிழகத்திற்கே: டி.கே.சிவகுமார் பேச்சு

9.1

தென்மாநில முதல்வர்கள் மாநாடு முடிவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக வெறும் 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அதைத் தவிர்த்து அணையில் சேமிக்கப்படும் மற்ற அனைத்து நீரும் தமிழகத்திற்கே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

மேகதாது அணை கட்டப்படுவது பெங்களூருவின் குடிநீர் தேவையை மனதில்கொண்டுதான் என விளக்கமளித்த அவர், இதனால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்பதோடு எஞ்சிய தண்ணீர் முழுமையாகத் தமிழகத்திற்கே செல்லும் என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon