திராவிடர் கழகத்தினர் டுவீலர் பேரணி நடத்த அனுமதி..!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க. சார்பில் திட்டமிடப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரச்சார பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. இதனை எதிர்த்து திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




