--- --:--:-- --

மாநிலங்களவையில் தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்..!

3.1

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. உத்திர பிரதேசத்தில் இருந்து பத்து பேர் மற்றும் உத்தரகாண்டில் இருந்து ஒருவர் என மொத்தம் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 25 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

 

அதனையடுத்து அந்த பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon