--- --:--:-- --

உள்ளாட்சித்தேர்தல் களத்தில் திமுகவும் ஆர்வம் – நவ. 14 முதல் 20 வரை விருப்பமனு தரலாம்

Stalin 04

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், நவம்பர் 14 முதல், 20ஆம் தேதி வரை விரும்ப மனு தரலாம் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அதிமுக தரப்பில் விண்ணப்பத்தை பெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவும் ஆவலாக உள்ளது. இதில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 14 தேதி முதல் 20 தேதி வரை, அந்தந்த மாவட்ட திமுகவிடம் விருப்புமனுக்களை அளிக்கலாம்.

 

உள்ளாட்சி தேர்தலை, கூட்டணி அமைத்து திமுக சந்திக்கும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணி தொடர்பான பேச்சுகள் நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon