2 ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து- தவறான சிக்னலால் விபரீதம்; பலர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் விபத்து நேரிட்டது. இதில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே பிளாட்பார்மில் ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால், இந்த விபத்து நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில் புறநகர் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில், இரு இன்ஜின்களும் பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்விடத்திற்கு, மீட்பு குழுவினர் விரைந்து, மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




