--- --:--:-- --

கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை!

5

கோவையில் உள்ள வஉசி மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

கோவை மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு வயது 54. இவர் கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தார். இதற்கிடையே இவர் இன்று கோவை வஉசி மைதானத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்குள்ள மரத்தில் சொக்கலிங்கம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரேஸ் கோர்ஸ் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சொக்கலிங்கம் திடீரென தற்கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Right Menu Icon