--- --:--:-- --

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பா..? திரையுலக பிரபலங்கள் பலரும் கலக்கம்!!

kg

கொரோனா அறிகுறிகுறியுடன் நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் i விக்னேஷ் சிவனும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.

 

உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா தொற்று, பிரபலங்கள் முதல் சாமான்யன் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். வசதி படைத்தவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் கலங்கடித்து வருகிறது. சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிரபலங்கள் பலரின் உயிர்களும் பறிபோகும் அவலம் அரங்கேறி வருகிறது.

 

தமிழகத்திலும் அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி அச்சத்தை அதிகரித்து வருகிறது. இதில் சென்னையின் திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் மறைவு விஜபிக்கள் பலரையும் கதிகலங்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.

 

தொடர்ந்து பிரபல சினிமா பாடகர் ஏ.எல்.ராகவன் சில தினங்களுக்கு முன் திடீரென காலமான நிலையில் அவரும் கொரோனா தொற்று காரணமாகவே இறந்தது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அவருடைய மனைவியும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இது மட்டுமின்றி சென்னையில் நேற்று மட்டும் பிரபலமான விஜயா மருத்துவமனையின் இயக்குநர் சரத் ரெட்டி, டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன், திமுக முக்கிய புள்ளிகளில் ஒருவராக திகழ்ந்த வட சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.பலராமன் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிமுக எம்எல்ஏ பழனி ஆகியோருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக தமிழக அமைச்சர்கள் பலரும் கொரோனா அச்சத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

ஏனெனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த மேலும் சிலருக்கும் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலரின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதே இந்த அச்சத்திற்கு காரணம்.

 

இந்நிலையில் கொரோனா அச்சத்தில், தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா, அவருடைய காதலரான இயக்குநர் விக்னேஷ்சிவன், மற்றொரு பிரபல இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுல புள்ளிகள் பலர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாராவுக்கும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா தொற்று என்று வெளியாகியுள்ள உறுதி செய்யப்படாத தகவல் தமிழ்த் திரையுலக பிரபலங்களை கலக்கமடையச் செய்துள்ளது. இதனால் உஷாராக மேலும் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு முன்னர் பிரபல இயக்குநர் பாரதிராஜா, நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமலஹாசன், அவருடைய மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பாதுகாப்பு கருதி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon