மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்பு பறக்கும் படைகள்..!
தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பத்து பறக்கும் படைகளை மாவட்ட ஆட்சியர் வினய் அனுப்பியுள்ளார்.
இந்த பறக்கும் படையை மாநகராட்சி உதவி ஆணையர், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உள்ளனர். இவர்கள் முககவசம், சமூக இடைவெளி வணிக நிறுவனங்களில் ஊடக விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இந்த பத்து பறக்கும் படைகளின் பணிகளில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தொடங்கி வைத்தார். இந்த குழு முதலில் மாநகராட்சியில் 100 வார்டுகளில் செயல்படும் என்றும் பின்னர் புறநகர்ப் பகுதியில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






