சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரொனா காரணமாக வீட்டு தனிமையில் இருந்த நிலையில் டெல்லியில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவர் தற்பொழுது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு தனது மகளும், காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான பிரியங்கா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமை இருந்த சோனியா காந்தி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






