சிறுமி கருவுற்றதால் பயந்து சிறுமியும் இளைஞரும் தற்கொலை முயற்சி..!
திருவாரூர் அருகே 15 வயது சிறுமி மற்றும் அவரிடம் அத்துமீறிய இளைஞர் என இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்னிலம் பகுதியை சேர்ந்த அஜய் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கருவுற்ற நிலையில் பயந்து போன சிறுமி மற்றும் இளைஞர் இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.






