காரின் இன்ஜின் பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு..!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காரின் இன்ஜின் பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பிடிபட்டது. பொமானா நகரில் சுற்றுலா தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மலைப்பாம்பு இருப்பதை பெண் ஒருவர் கவனித்தார்.
பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு அவர் காரின் எஞ்சின் பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தார். மேலும் அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.







