சிறிய ரக விமானம் விபத்து.. நூலிழையில் தப்பிய விமானி..!
கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலைய கட்டிடத்தின் மேற்கூறையில் மோதி விபத்திற்கு உள்ளானது. திங்கள்கிழமையன்று ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பொழுது இந்த விபத்து நேர்ந்தது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் செட்டின் மீது மோதியதில் முன் பகுதி மேற்கூரையில் புகுந்தது. இந்த விபத்தில் விமானி காயங்களுடன் உயர் தப்பியதாகவும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





