--- --:--:-- --

சிங்கப்பூர் வகை கொரொனா எனக் கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம்..!

3

சிங்கப்பூர் வகை கொரொனா என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூற்றுக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை கொரொனா குழந்தைகளுக்கு இடையே பரவுவதால் சிங்கப்பூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

 

இதற்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இது தொடர்பான கண்டனத்தையும் பதிவு செய்தது. மேலும் சிங்கப்பூரில் புதிதாக எந்த வகை கொரொனாவும் இல்லை என்றும், தற்போது புதிதாக தோன்றியுள்ள திரிபு ஏற்கனவே உள்ளது தான் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

 

இதனிடையே கொரொனா வகை குறித்து பேசுவதற்கு டெல்லி முதல்வருக்கு தகுதி இல்லை என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியுள்ளார்.

 

டெல்லி முதலமைச்சர் இந்தியா சார்பில் பேசவில்லை என கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களால் இந்தியா – சிங்கப்பூர் இடையேயான நெடுநாள் உறவு பாதிக்கப்படும் என்று இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து கொரொனாவுக்கு எதிராக போராடி வருவதாகவும் இந்தியாவிற்கு தேவையான ஆக்சிஜனை சிங்கப்பூர் வழங்கி வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon