துண்டாக்கப்பட்ட போலீசின் கை… மீண்டும் ஒட்டவைத்த மருத்துவர்கள்!
பஞ்சாப் மாநிலத்தில் பொது முடக்கத்தை மீறி வெளியே வந்ததை தடுத்த காவல் உதவி ஆய்வாளரின் கையை நீட்டினார். வெட்டப்பட்ட கையை மருத்துவர்கள் 7 மணி நேரம் போராடி வெற்றிகரமாக இணைத்தனர். பஞ்சாப்பில் மே ஒன்றாம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காய்கறி சந்தை வழியே வந்த ஒருவாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதிலிருந்து அந்த குழுவினரிடம் வெளியே வருவதற்கான பாஸ் இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரித்தனர். ஆத்திரமுற்று அவர்கள் காவல்துறையினர் மீது வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.
இதில் உதவி ஆய்வாளரின் கை வெட்டப்பட்டது. காவலர்கள் படுகாயமுற்றன.ர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருக்கும் போது உருத்வாராவிற்குள் பதுங்கிட அங்கு வந்த காவல் உயரதிகாரிகள் ஒரு பெண் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இதனிடையே கை துண்டாக்கப்பட்ட அரிஜித் சிங் சண்டிகரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
அங்கு மருத்துவர்கள் ஏழு மணி நேர மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் பலனாக ஹரி சிங்கின் வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது.







