--- --:--:-- --

தாராவி மக்களிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் பரிசோதனை!

3

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடிசை பகுதி மக்களுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை கொடுத்த பரிசோதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக குடிசைப்பகுதி மக்களுக்கு ஹைட்ராக்ஸிடோராவின் சல்ஃபேட் மாத்திரைகள் வழங்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

கொரொனா வேகமாக பரவ வாய்ப்பு இருக்கும் பகுதி என்பதால் தாராவியில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எத்தனை பேருக்கு எவ்வளவு மாத்திரை எந்த காலகட்டத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவ பணியாளர்களுக்காக பரிந்துரை செய்திருக்கும் நிலையில் முதன் முறையாக சமூக அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பை தாராவி பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

 

இதனால் அங்கு மருத்துவ பணியாளர்கள் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளியை சரிவர பின்பற்றப்படுகிறதா என்று பலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்பட்டிருக்கும் தாராவி தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் இடம் ஆகும். மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வரும் கொரொனா வைரஸ் இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இந்த பெரும் தொற்று நோய்க்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அந்தப் பகுதியில் கொரொனா வைரஸ் அதிக அளவில் பரவும் என அஞ்சப்படும் மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இந்த பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தாராவி மற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாராவியில் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தனிமனித இடைவெளி சரிவர கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை காவல்துறையினரே மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே மும்பையில் கல்யாண் பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாத கைக்குழந்தை முழுமையாக குணம் அடைந்து பின்னர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு அண்டை வீட்டாரும் அந்த பகுதி மக்களும் வாழ்த்துக் கூறி வரவேற்றனர்.

Leave a Reply

Right Menu Icon