--- --:--:-- --

கழிவறை நீரில் பானிபூரி தயாரித்த கடை..! ருத்ர தாண்டவம் ஆடிய வாடிக்கையாளர்கள்..!

5

ளம் பெண்கள் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களின் பட்டியலில் பானிபூரி தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்த உணவுப் பொருள் பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில், சொல்வதற்கே குமட்டுகின்ற அளவில் தயாரிக்கப்படுகின்றன.

 

இதனை இன்னும் ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. மும்பை கொல்காபூரிலுள்ள ஏரிக்கு அருகில் ஸ்பெஷல் பானிபூரி வாலா என்ற பெயரில் பானிபூரி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது.

 

இந்த கடையில் உள்ள பானிபூரி தான் மிகவும் சுவையாக இருப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் குவிகின்றனர். ஆனால் அதன் பிறகே அந்த பானி பூரியை ரசித்து ரசித்து உண்ட வாடிக்கையாளர்களுக்கு தலையில் இடி இறங்கியதை போன்ற வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.

 

அதாவது பானிபூரியோடு சேர்த்துத் தரப்படும் நீரில் கழிவறையில் இருக்கும் தண்ணீரை அந்தக் கடை ஊழியர்கள் கலந்துள்ளனர். வீடியோ அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

தினமும் வாங்கி சாப்பிட்ட கஸ்டமர்கள் கடைக்கு நேரடியாக சென்று ருத்ர தாண்டவமே ஆடி உள்ளனர். உணவகங்களில் சாப்பிடும் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே சாட்சி.

Leave a Reply

Right Menu Icon