செல்போன் திருட சென்ற இடத்தில் தனது செல்போனை தவறவிட்டுச் சென்ற திருடன்..!
செல்போன் திருட வந்த இடத்தில் தனது செல்போனை திருடன் ஒருவன் தவற விட்டு சென்ற சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. ஜாபர்கான்பேட்டை ஓட்டல் ஊழியர்கள் ஐந்து பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
காற்று வாங்குவதற்காக இரவு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய நிலையில் அதிகாலை வீட்டில் நுழைந்த திருடர்கள் இரண்டு பேரும் உள்ளே இருந்த நான்கு செல்போன்களை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கவே திருடிய செல்போனோடு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தப்பியோடிய இருவரில் ஒருவன் தனது செல்போனை விட்டு சென்றுள்ளான் . போலீசார் கைக்கு சென்றது தெரியாமல் ஆகாஷ் எங்க டா இருக்க நான் விஷ்ணு பேசுகிறேன் என்று கூறியுள்ளார். திருடர்கள் இருவரின் பெயரும் தெரிந்த குசியில் பழைய குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






