தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்..!
சென்னை, விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை தனிப்படை காவலர்கள் கைது செய்து 22 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த காவலர்கள் ஜெயபுரம் அருகே வானக சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியில் நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டி வந்த வாலிபரை மடக்கி விசாரித்துள்ளனர்.
முரண்பாடான தகவல்களை தெரிவித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தான் ஓட்டிய பைக்கை திண்டிவனம் பகுதியில் திருடியதாக ஒப்புக் கொண்டார் . பின் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் இன்னொரு நபருடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இருவரையும் கைது செய்த காவலர்கள் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 22 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்





