--- --:--:-- --

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்..!

4

யிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். திருநாவுக்கரசுக்கும் போலீஸ் குடியிருப்பு அருகே வசிக்கும் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

 

இதனிடையே திருநாவுக்கரசுக்கும், நண்பரின் மகளான சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நண்பரின் மகளான 16 வயது சிறுமியை கடந்த 8ம் தேதி காவலர் குடியிருப்புக்கு வரவழைத்து திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அவரை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு புகார் செய்த நிலையில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் திருநாவுக்கரசை போக்சாவில் கைது செய்து நாகை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon