மாத்திரைகளில் பூஞ்ஜை படர்ந்து இருந்ததால் அதிர்ச்சி..!
தனியார் மருத்துவமனையில் தரமற்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகா தேவியை சேர்ந்த தீர்க்காதரி என்பவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கியுள்ளார். மாத்திரைகளில் பூஞ்சை படர்ந்து இருந்ததால் இது குறித்து தனியார் மருத்துவமனையில் காவலர் முறையிட்டுள்ளார்.
அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.





