அனைத்து கல்லூரிகளிலும் பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலம் கட்டாயம்.!
ஆந்திராவில் அனைத்து கல்லூரிகளில் பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நம்பிக்கையில் ஆந்திராவிலுள்ள அனைத்து அரசு தனியார் உதவி மற்றும் உதவி பெறாத கல்லூரிகளில் பட்டப் படிப்புகளுக்கு ஆங்கில பாடம் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்துவது பட்டதாரிகளுக்கு சிறந்த பணி வாய்ப்புகளைப் பெறவும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







