கரையை நோக்கி வந்த சுறாக்கள்.. கடலில் விளையாடியவர்கள் அலறி அடித்து ஓட்டம்..!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதிக்கு சுறா மீன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுறாவின் துடுப்பு பகுதி மற்றும் வால் பகுதி தண்ணீருக்கும் மேல் தெரிந்ததை பார்த்த மக்கள் அச்சமடைந்து வேகமாக கரைக்கு திரும்பினர்.
அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதத்தில் 16 சுறா மீன் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அதில் ஃப்ளோரிடாவில் மட்டும் ஒன்பது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






