--- --:--:-- --

பாலத்தின் அடியில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை…?

6

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவரான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை போன்றே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார், ரங்காரெட்டி மாவட்டம் நங்கவள்ளி கிராமம் அருகே காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

பாலத்திற்கு அடியில் இளம்பெண் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். சடலத்தை மீட்ட காவல்துறையினர் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

 

உடற்கூறு ஆய்விற்காக பெண்ணின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பெண் யார் எனவும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்று விசாரிக்கும் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

சில மாதங்களுக்கு முன்பாக கால்நடை பெண் மருத்துவர் ஒருவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் காவல்துறையின் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon