தேர்வு எழுதும் முன் கைகளை கழுவ வேண்டும்!
பொதுத்தேர்வு எழுதும் வகுப்பறைகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக சோப்பு மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்வதை தேர்வு மைய கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கிருமி நாசினிகள் மற்றும் சோப்புகளை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக ஆந்திர எல்லையில் தொடக்கப்பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. லட்சுமிபுரம் பகுதியில் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
மதிய உணவு அளிக்கப்பட்ட பின்னர் மாணவ மாணவிகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என பள்ளியின் தற்காலிக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




