ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!
ஆந்திராவில் ஓடும் ரயிலில் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிசெய்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் கழிவறைக்கு சென்றுள்ளார்.
இதனை கண்ட மர்ம நபர் இளம் பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றார். இதனிடையே இளம் பெண்ணின் சத்தம் கேட்டு வந்த சக பயணிகள் மர்ம நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓடும் ரயிலில் இளம் பெண்ணை மர்ம நபர் பாலில் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





