--- --:--:-- --

பயிற்சியில் மயங்கி விழுந்த காவலர்.. திருமணமான ஓராண்டில் சோகம்..!

8

துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியின்போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குலசேகரன்கோட்டை சேர்ந்தவர் பசுபதி. காவலரான இவருக்கு திருமணமாகி ஓராண்டே ஆகிறது.

 

பசுபதி துப்பாக்கி சூடும் தளத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட பொழுது மயங்கி விழுந்தார். அவரை சில காவலர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

சிகிச்சை பலனின்றி பசுபதி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மரப்பநாடு போலீசார் விசாரணை நடத்தினர். ஓட்டப்பயிற்சியின் பொழுது சக காவலர் உயிரிழந்த சம்பவம் மற்ற காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon