ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார் ..!
மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது ராஜ்பவன் பெண் ஊழியர் அளித்துள்ள பாலியல் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மேற்குவங்க ஆளுநர் ஆனந்த் போஸ் தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் பொய் புகார் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஊழல் வன்முறைகளுக்கு எதிரான தனது போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






