whatsapp குழு மூலம் மெத்தபெட்டமைன் சப்ளை..!
சென்னையில் whatsapp குழு மூலமாக மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த காதர் மொய்தீன் என்பவர் போலீசார் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் சுல்தான் என்பவரின் whatsapp குழு மூலமாக காதல் மொய்தீன் போதை பொருள் வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து சுல்தான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவான்மையூறை சேர்ந்த ராகுல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ராகுல் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதை பொருள் கடத்தி வந்ததும் இலங்கையைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதும் தெரிய வந்துள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சரின் உறவினர் என தெரிய வந்த நிலையில் திருவான்மையூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.






