திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டு.. வெளியான அறிவிப்பு..!
கடந்தாண்டு மே மாதம் 19ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது.
தற்பொழுது ஓராண்டு நெருங்கியுள்ள நிலையில் 97.76% , 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு 7,961 கோடி எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.






