காங்கேயத்தில் 3 கடைகளில் தொடர் திருட்டு..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – கரூர் சாலையில் இன்று அதிகாலை 3 கடைகளில் பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கரூர் சாலையில் ஜெராக்ஸ் கடை மற்றும் இசேவை மையம் நடத்தி வருபவர் கோகுல் (35) இவரது கடையில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 5 ஆயிரத்தை திருடி சென்றனர். மேலும் 2 கடைகளில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.





