தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்!
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களில் இருந்து 1,086 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.





