--- --:--:-- --

புதிய தொழில் தொடங்கியுள்ள சீரியல் நடிகை ஜனனி..!

12

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

 

மேலும் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் போலீஸ் வெப் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நடிகை ஜனனி அசோக் குமார் புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். ஆம், நடிகை ஜனனி புதிய ஸ்வீட் கடை ஆரம்பித்துள்ளார்.

 

இந்த ஸ்வீட் கடையின் திறப்பு விழாவில் ஜனனியின் நெருங்கிய நபர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில் அவருடைய நெருங்கிய தோழியான நடிகை ஷபானா கலந்துகொண்டு, தனது தோழியின் புதிய தொழிலுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon