‘உதயசூரியனுக்கு’ ஓட்டு போடுங்க… கிராமங்களில் செல்வராஜ் பிரசாரம்!
வாக்கு சேகரிப்பின்போது குழந்தையை தூக்கிக் கொஞ்சிய செல்வராஜ்.
பல்லடம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தனது தீவிரப் பிரச்சாரத்தின் மூலம் தொகுதியைத் தன்வசப்படுத்தி வருகிறார். திருப்பூர் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அவர் மேற்கொண்ட சூறாவளிப் பிரச்சாரத்தின்போது, பொதுமக்கள் ஆளுயுர மாலைகள் அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு
மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட வடுகம்பாளையம் புதூர் பகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய செல்வராஜ், தொடர்ந்து சித்தம்பலம், கவுண்டம்பாளையம், புள்ளியப்பம்பாளையம், சின்னூர் மற்றும் வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, நாசுவம்பாளையம் மற்றும் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குங்குமபாளையம் பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். செல்லும் இடமெல்லாம் பெண்கள் குலவையிட்டும், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளித்தது தேர்தல் களத்தில் திமுகவின் கை ஓங்கியிருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.
வெற்றிப் பாதைக்கான வாக்குறுதிகள்
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் செல்வராஜ் முன்வைத்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்: பல்லடம் பகுதியின் பிரதான தொழிலான விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தைச் செயல்படுத்தி விவசாயிகளின் நீர் ஆதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வு மற்றும் மின்சார மானியம் முறையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும். கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடற்ற நிலையை உருவாக்கப் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும் என்று செல்வராஜ் வாக்குறுதி தந்தார்.





