ஆண்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்..!
பெண்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது போல ஆண்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை செய்தவர் பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். யாருக்கும் பயன்படாத இந்த ஆட்சிக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறினார்.






