சென்னையில் தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து வந்த மர்ம நபர்..!
சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் மட்டும் அந்தரத்தில் தொங்கிய நிலையில் மர்ம மனிதர் ஒருவர் கோட்சூட் அணிந்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தார்.
வழக்கமாக தலையில் ஹெல்மெட் இல்லாமல் தான் வருவார்கள். ஆனால் இங்கே ஒருவர் தலையே இல்லாமல் வருகிறாரே என்று போக்குவரத்து போலீஸ்காரர் அதிர்ச்சியோடு நின்றார்.
அருகில் வந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் கொரொனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் சுகாதாரத் துறையினர் மற்றும் ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலைஞர் மதன் குமார் என்பவர் வித்தியாசமான உடையணிந்து வலம் வருவதாக கூறினார்.
போலீஸ்காரர் கையில் ரோஜாப்பூக்களை கொடுத்தார். அதேபோல மற்றொரு இடத்தில் நின்ற அவரை கண்டு மக்கள் பீதியடைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருக்கு ரோஜா பூக்களை வாங்கி வணக்கம் வணக்கம் வைத்து விட்டு தியாகராய நகரை நோக்கி பயணித்தார் மதன்குமார்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நன்றி தெரிவிப்பது எல்லாம் சரிதான் நம்ம ஊர் சாலையில் ஒழுங்காக வாகனம் ஓட்டிச் சென்றால் எதிர்பாராத விபத்து எல்லாம் நிகழ்கின்றது. முகத்தை மூடிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் எதிர்பார்த்த விபத்து ஏதும் நிகழ்ந்து விடப் போகிறது என்று அங்கு கூடியவர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.







